வேகமெடுக்கும் குரங்கு அம்மை : விமான நிலையங்களுக்கு சுகாதாரத்துறை புதிய உத்தரவு
குரங்கு அம்மை நோய் தொடர்பாக விமான நிலையங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
உலக நாடுகளைக் கடந்த சில மாதங்களாக அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை ,இந்த நிலையில் குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்குக் கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று அனைத்து விமான நிலையங்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை பொதுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி " குரங்கு அம்மை பாதிப்பு என சந்தேகத்திற்கிடமானவர்களை தனிமைப்படுத்திட வேண்டும்.
குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் ஏதேனும் பயணிகளுக்கு இருப்பதாக சந்தேகம் இருந்தால் அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.