தேனில் ஊறவைத்த வெங்காயத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா?

healthbenefits honeysoakedonion onionbenifits honeybenefits
By Petchi Avudaiappan Mar 26, 2022 12:42 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

சின்ன வெங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கும்  நிலையில் சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. 

வெங்காயத்தை பொறுத்தவரை சின்ன வெங்காயத்தில் அதிகளவு சல்ஃபர் உள்ளது. இதை உணவில் தினசரி சேர்த்துக் கொள்வதால் உடல் வலிமை பெறுவதோடு  பருவ கால நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். 

 ரத்தத்தைச் சுத்திகரிக்கப் பயன்படும் சின்ன வெங்காயம் தேனில் ஊற வைத்து சாப்பிடும் போது இரட்டிப்பு மடங்கு பலன் தருகிறது. இவை இரண்டிலுமே மிக அதிக அளவிலான ஆன்டி - ஆக்ஸிடண்ட்டுகள் இருக்கின்றன. இவை நம்முடைய உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் அஜீரணக் கோளாறு  தடுக்கப்படுகிறது. 

தேனில்ஊற வைத்த சின்ன வெங்காயத்தை காலையில் வெறும் வயிற்றில் தினமுமு் இரண்டு வீதம் சாப்பிடும் போது, அது உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றுகிறது.  வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் ஏற்பட்ட இன்சோம்னியா பிரச்சினையை சின்ன வெங்காயம் தீர்க்கிறது.

நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதால் உ்ணடாகிற மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லை,  நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சின்ன வெங்காயம் அருமருந்தாக உள்ளது. சின்ன வெங்காயத்தின் சாறெடுத்து அதனுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால்  நெஞ்சு சளி சரியாகும்.

செய்முறை

ஒரு சுத்தமாக பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொண்டு,  அதில் நன்கு தோலுரித்த இரண்டாகக் கீறிய சின்ன வெங்காயத்தைப் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தேனை ஊற்ற வேண்டும். இரண்டு நாட்கள் கைபடாமல் எடுத்து வைக்க வேண்டும்.

இரண்டு நாட்கள் கழித்து சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கியிருக்கும். நீங்கள் வைத்ததை விட சற்று நீர்த்துப் போயிருக்கும். ஏனெனில் வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்தும் தேனுடன் சேர்ந்து ஊறியிருக்கும். அவ்வளவு தான் இந்த அருமருந்து ரெடி...!