இதயத்தை பலப்படுத்தும் சிறந்த உணவு.. என்ன தெரியுமா?
நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். ஆரோக்கியமான உணவு என்று வரும் பொழுது அதில் பயிறு வகைகள் முதன்மை பெறுகிறது. அதிலும் காராமணி என்று அழைக்கப்படும் தட்டை பயிரில் அதிக நார்சத்து நிறைந்து இருக்கிறது.
அதாவது, தட்ட பயிரில் இருக்கக்கூடிய நார்ச்சத்து நம்முடைய செரிமானத்திற்கும் குடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்வதற்கும் உதவியாக இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் நம்முடைய உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறது.
ஆதலால் உடல் பருமன் மிக்கவர்கள் இந்த தட்டை பயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது உடல் எடையை அவர்கள் எளிதாக குறைத்து விடலாம். இந்த தட்டைப் பயிரில் வைட்டமின் சி, ஏ, பி, போலிக் ஆசிட், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், சோடியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
இவை எல்லாம் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த தட்டைப்பயிறு மிகவும் உகந்ததாக இருக்கிறது. அது அவர்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
மேலும் நம்முடைய இதயத்திற்கு இதமானதாக இந்த தட்டை பயறு உள்ளது. இதில் குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. அதனால் அவை ரத்தத்தில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே இதயம் ஆரோக்கியமாக செயல்படும்.

மேலும் இந்த தட்டை பயிரை தொடர்ந்து ஒருவர் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அவர்களுக்கு முடி ஆரோக்கியமாக இருப்பதோடு முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது.
பளபளப்பான சருமம் வேண்டும் என்று நினைப்பவர்களும் அந்த தட்டைப் பயிரை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது ஒரு நல்ல மாற்றத்தை அவர்கள் காணலாம். நம்முடைய வசதிக்கு ஏற்ப நாம் சமைத்து சாப்பிடலாம்.
அதாவது மசாலாவாக அரைத்து குழம்பாக வைத்தும் சாப்பிடலாம். முளைகட்டிய தட்டை பயிரை குழம்பும் செய்து சாப்பிடலாம். தட்டைப் பயிரை கொண்டு அடை செய்து சாப்பிடலாம் என்று நம்முடைய வசதிக்கு ஏற்ப இந்த தட்டைப் பயிரை சமைத்து உணவில் சேர்த்து கொள்ளும் பொழுது ஆரோக்கியம் மேம்படும். நம்முடைய இதயம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.