தினமும் இரவு ஒரு டம்ளர் கிராம்பு பால்.., கிடைக்கும் நன்மைகள் ஏராளம்
அஞ்சறை பெட்டியில் இருக்கும் கிராம்பு பல வழிகளில் உடலுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.
கிராம்பு உணவிற்கு மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது.
அந்தவகையில், தினமும் தினமும் இரவில், இரண்டு அல்லது மூன்று கிராம்புகள் சேர்த்த பாலை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
மன அழுத்தம்- கிராம்பு பாலில் உள்ள துத்தநாகம், தாமிரச்சத்து, மெக்னீசியம் ஆகியவை மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
தூக்கமின்மை- கிராம்பு பாலை இரவு தூங்கும் முன் அருந்துவதால் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.
செரிமானம்- இந்த கிராம்பு பாலை குடிப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். மேலும், ஜீரணசக்தியை அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி- கிராம்பில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்கள் பருவ கால நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்- கிராம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் உள்ள வீக்கத்தை போக்கி கீல்வாதம் மூட்டு வலி ஆகிய பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது.
இரத்த சர்க்கரை- கிராம்பு வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்- கிராம்பு, இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
வலி நிவாரணி- கிராம்புகளில் உள்ள யுஜினால் என்ற எண்ணெய் சிறந்த வழி நிவாரணியாக உள்ளது. கிராம்பு பாலை அருந்துவது மூலம் உடலில் வலி தீரும்.