அடிக்கடி பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுறிங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!
பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துத் தெரிந்துகொள்ளலாம்.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இதயம் சீராகச் செயல்பட உதவும். இதில் நைட்ரேட் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு இருப்பதால் அவை ரத்தக்குழாய்களை அமைதிப்படுத்தி ரத்தம் சீராக உடலில் பரவ உதவும்.உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது.
படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கவும் பீட்ரூட் உதவுகிறது. மேலும் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் . மேலும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். பீட்ரூட் ஜூஸ் அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
பித்தத்தைக் குறைக்கும். அதுமட்டுமில்லாமல் உடற்பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்குப் பீட்ரூட் ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பீட்ரூட் ஜூஸில் கலோரி குறைவு. ஆனால் நார்ச்சத்து அதிகம். இதனால் பீட்ரூட் ஜூஸை நீங்கள் குடித்தால் பல மணி நேரங்கள் வயிறு நிரம்பியதைப்போல முழுமையாக உணர உதவும்.
நன்மைகள்
பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயைக் குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.மேலும் தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்குப் பீட்ரூட் ஜூஸ் தடவினால் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
பீட்ரூட்டை மட்டுமே தினமும் எடுத்துக்கொண்டால் உடலில் சத்துக்களின் சமநிலையில் மாறுபாடு ஏற்படும் . இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் எடுத்துக்கொண்டாலே போதும்.