யாரெல்லாம் பாதாம் பால் குடிக்கலாம்? அதை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Healthy Food Recipes Life Style
By Sakthi Raj Mar 27, 2026 12:00 PM GMT
Report

ஒரு சிலருக்கு பால் ஒவ்வாமை இருப்பதை நாம் பார்க்கலாம். அவர்களுக்கு பால் குடிப்பதால் அலர்ஜி போன்றவை உருவாகுகிறது. அவர்கள் இந்த பாதாம் பால் குடிப்பது ஒரு நல்ல மாற்றமாகவே அமையும். அதை பற்றி பார்ப்போம்.

நம்முடைய உடலுக்கும் நம்முடைய எலும்புக்கும் அதிக அளவில் ஊட்டச்சத்து சேர்ந்தால்தான் நாம் உடல் வலிமையோடு இருக்க முடியும். அப்படியாக பாதாம் பால் குடிப்பதால் நம்முடைய எலும்பு பலப்படுகிறது.

யாரெல்லாம் பாதாம் பால் குடிக்கலாம்? அதை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? | Health Benefits Of Drinking Badham Milk

கோடை காலத்தில் ஏன் முலாம் பழம் சாப்பிடுவது அவசியம் தெரியுமா?

கோடை காலத்தில் ஏன் முலாம் பழம் சாப்பிடுவது அவசியம் தெரியுமா?

அதை போல் நம்முடைய சருமமும் இந்த பாதாம் பால் குடிப்பதால் புத்துணர்ச்சி பெறுவதோடு இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஈ நம்முடைய சருமத்தை பாதுகாக்கிறது. பொதுவாக பாதாம் பாலில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் பேட் உள்ளது.

உடல் ஆரோக்கியத்திற்கு பல மடங்கு சத்துக்கள் கொடுக்கும் இடியாப்பம்

உடல் ஆரோக்கியத்திற்கு பல மடங்கு சத்துக்கள் கொடுக்கும் இடியாப்பம்

இதனால் இதய மற்றும் ஆரோக்கியத்திற்கும் மிகச் சிறந்தது என்று சொல்கிறார்கள். பலரும் தங்களுடைய இடை குறைப்பதில் ஈடுபட்டு கொண்டு இருப்பார்கள். அவர்கள் நிச்சயம் இந்த பாதாம் பால் குடிப்பது எடை குறைக்க உதவுகிறது.

பாதாம் பால் குடிப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. ஆதலால் பால் ஒவ்வாமை இருப்பவர்கள் நிச்சயம் ஒரு மாற்றாக இந்த சத்துக்கள் நிறைந்த பாதாம் பால் குடிக்கும் பொழுது உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு சுவையான உணவை அருந்திய உணர்வும் கிடைக்கிறது.