கொரோனா தொற்றிலிருந்து குணமானார்: புதுவை முதல்வர்

covid19 puducherry
By Irumporai May 15, 2021 05:31 PM GMT
Report

புதுவைமுதல்வராக பொறுப்பேற்ற என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமிக்கு கடந்த 9-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரங்கசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் தொற்றிலிருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டதால் வீடு திரும்பினார்.

வீடு திரும்பி உள்ள முதல்வர் ரங்கசாமி ஒரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கிறார்.