தடுப்பூசி போட வந்த நர்ஸுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காம லீலை தலைமையாசிரியர்!
ஒரு பள்ளிக்கு தடுப்பூசி போட வந்த நர்ஸுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமையாசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவின் பெங்களூருவில் பெலகாவியில் உள்ள டெகாவ் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சுரேஷ் சவலாகி என்பவர் தலைமை ஆசிரியராக இருந்தார் .அவர் மீது பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் தருவதாக பல புகார்கள் இருந்தன.
இந்நிலையில் அந்த தலைமையாசிரியர் சுரேஷ் அவர் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட வேண்டுமென்று கூறி ,அந்த ஊரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்யும் ஒரு இளம் பெண் செவிலியரை சந்தித்தார் .பிறகு அவரிடமிருந்து அவரின் போன் நம்பரை வாங்கிக்கொண்டார் .அதன் பிறகு அந்த நர்ஸுக்கு தினமும் பல ஆபாச செய்திகளையும் ,படங்களையும் அனுப்ப தொடங்கினர் , இதனால் நர்ஸ் தலைமையாசிரியர் சுரேஷ் பற்றி அந்த ஊர் மக்களிடம் தெரிவித்தார் .அப்போது அந்த ஆசிரியர் அனுப்பிய பலான செய்திகளையும் ,படத்தையும் ஊர் மக்களிடம் காண்பித்தார்.
அதை பார்த்து கொதித்து போன ஊர் மக்கள் அந்த ஆசிரியர் வேலை செய்யும் பள்ளிக்கு சென்று அவரை பிடித்து கடுமையாக தாக்கி,அவரை அந்த பள்ளியின் ஒரு வகுப்பறைக்குள் வைத்து பூட்டினர் .
அதன் பிறகு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் அந்த பள்ளிக்கு வந்து சுரேஷை கைது செய்தனர் .பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ,விசாரணை நடந்து வருகிறது .
அவர் ஏற்கனவே இரண்டு பெண்களிடம் இதே போல வம்பு செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.