கை,கால்களை அமுக்கி மாசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்; கதறி அழுத மாணவிகள் - பரபரப்பு சம்பவம்!
பள்ளி மாணவிகளை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமை ஆசிரியர் அட்டூழியம்
மேட்டூர் அருகே கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ராஜா (51) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 144 மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை தனது அறைக்கு அழைத்துச் சென்று கை,கால்களை அமுக்கி விட சொல்லியிருக்கிறார். பின்னர் தலையையும் மசாஜ் செய்ய சொல்லியிருக்கிறார். குழந்தைகள் இதை செய்ய மறுத்ததும் கட்டாயப் படுத்தி செய்ய சொல்லியிருக்கிறார் ராஜா. ஒருகட்டத்தில் மாணவிகள் இதைப்பற்றி தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்து அழுதுள்ளனர் .
இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர. ஸ்கூல் நடத்துகிறீர்களா? இல்லை மசாஜ் செண்டர் நடத்துகிறீர்கள் என்றும் மெற்ரோர்கள் கேள்வி கேட்டனர்.
போக்ஸோவில் கைது
இந்நிலையில் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் மீது கற்களையும், செருப்புகளை வீசியுள்ளனர். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளிடமும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்திய பின்னர் தலைமை ஆசிரியர் ராஜாவை போலீசார் போக்ஸோவில் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி ராஜாவை பனி இடை நீக்கமும் செய்து உத்தரவிட்டுள்ளனர்.