மாணவியை கற்பழித்த கொடூர ஆசிரியர் - சிறையில் இருந்து வெளிவந்து கொடுத்த இன்ப அதிர்ச்சி!
ஒடிசாவில் சிறையில் இருந்து வெளிவந்த குற்றவாளி ஒருவர், தான் கெடுத்த பெண்ணையே திருமணம் செய்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஒடிசாவின் கோராபுட்டில் உள்ள ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர், அவரின் பள்ளியில் படித்து வந்த ஒரு பழங்குடியினத்தை சேர்ந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து கடந்த 2020-ம் ஆண்டு அந்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அந்த மாணவியோ குழந்தை பெற்று குழந்தையோடு வசித்துவந்தார். இந்த நிலையில் தற்போது ஜாமீனில் வெளிவந்த அந்த ஆசிரியர், நேராக அந்த பெண் வீட்டிற்கு சென்று, அவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அவர்கள் இருவரும் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.