தலையில்லாத விநாயகர் சிலை.. கோவில் மர்மத்தின் வெளிவரும் பல அரிய தகவல்கள்!
தலையில்லாத விநாயகர் கோவில் எங்கு அமைந்துள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உத்தரகாண்ட்
இந்தியக் கலாச்சாரம், சடங்குகள், பாரம்பரியப் பழக்கவழக்கங்களுக்குப் பெயர் போனது. ஒவ்வொரு மாநிலங்களுக்கு வித்தியாசமான முறை பின்பற்றப்படுகிறது. அதிலும் இந்தியாவில் கோவில்கள் இல்லாத கிராமங்களைப் பார்க்க முடியாது.
அதிலும் குறிப்பாக சில கோவில்கள் அதன் தனித்துவமான விஷயங்களுக்குப் புகழ்பெற்று விளங்குகிறது. உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலிலிருந்து 20 கிமீ தொலைவில் முன்கடியா கிராமத்தில் தலையில்லாத விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
புராணக் கதையின்படி சிவன் பெருமான் தவம் செய்வதற்காக வெளியே சென்றிருந்தார்.அப்போது பார்வதி தேவி மஞ்சலில் ஒரு திருவுருவத்தை உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்தார்.அக்குழந்தையைப் பார்வதி தேவி தன் மகனாக ஏற்று விநாயகா என்று பெயரிட்டாள்.
விநாயகர் கோவில்
அதன்பிறகு பார்வதி கௌரி குண்டத்தில் நீராடச் செல்லும்போது குகைக்கு வெளியே விநாயகரைக் காவலுக்கு நிற்க வைத்துள்ளார். அதே சமயத்தில் சிவபெருமான் அந்த குகைக்கு வந்தார்.ஆனால் சிவன்தான் தனது தந்தை என்பதை அறியாத விநாயகா அவரை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்.
இதனால் கோபமடைந்த சிவபெருமான், தன்னுடைய திரிசூலத்தால் விநாயகனின் தலையைத் துண்டித்தார்.சிவபெருமான் விநாயகரின் ஆணவத்திற்குத் தண்டனையாக அவரது தலையைத் துண்டித்த இடமாகும்.இதனால் தலையில்லாத விநாயகர் கோவில் அமைக்கப்பட்டு வழிப்பட்டு வருகின்றனர்.