அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை தாக்கியுள்ளனர் - மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் பகீர் பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரை சந்தித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.
3 இடங்களில் அடைப்பு
அமலாக்கத்துறையின் சோதனையை தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 3 இடங்களில் அடைப்பு இருப்பதை அடுத்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து விசாரணை நடத்திய சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறையினர் தாக்குதல்?
இதனிடையே இன்று செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் நேரில் சென்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை மேற்கொண்டார்.
கைதின் போது அமலாக்கத்துறையினர் தாக்கியதாகவும், இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் செந்தில் பாலாஜி கூறியதாக தெரிவித்தார்.
மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யும் போது தன்னை தரையில் போட்டு தரதரவென இழுத்ததாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தாக கூறினார்.
வலது கை பிடித்து நெரித்ததால் வலி ஏற்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையத்தில் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜியை பார்க்கும் பொழுது அறுவை சிகிச்சை தேவைப்படுவது போல தான் உள்ளது என்று மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.