ஒரு ஆணிடம் இப்படி கேட்குற பொண்ணுக்கு இதான் பெயர் : சர்ச்சையில் சிக்கிய சக்திமான்

Sexual harassment Crime
By Irumporai Aug 11, 2022 10:09 AM GMT
Report

1997 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான சக்திமான் தொடருக்கு வயது வித்தியாசமில்லாமல் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே சக்திமான் சீரியலை படமாக சமீபத்தில் சோனி நிறுவனம் முடிவு செய்தது.

சக்திமான்

கொரோனா ஊரடங்கில் இந்த தொடர் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் டிஆர்பியில் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளியதால் இதனை படமாக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனிடையே முகேஷ் கண்ணா தனது யூடியூப் சேனலான பீஷ்ம் இன்டர்நேஷனலில் ஒரு வீடியோவைப் பதிவேற்றினார்.

அந்த வீடியோ இப்படிப்பட்ட பெண்கள் உங்களையும் கவர்ந்திழுப்பார்களா? என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்தது. அந்த வீடியோவில் ஆண்களிடம் தாமாகவே வந்து உடலுறவு வைத்துக் கொள்ள கேட்கும் பெண்கள் பெண்களே அல்ல என்றும், அவர்கள் வணிக நோக்கத்திற்காக அதனை கேட்பதாக கூறியுள்ளார்.

ஒரு ஆணிடம் இப்படி கேட்குற பொண்ணுக்கு இதான் பெயர் : சர்ச்சையில் சிக்கிய சக்திமான் | He Wants Sex She Is Running A Dhanda Mukesh Khanna

ஏனென்றால் இது போன்ற வெட்கக்கேடான விஷயங்களை எந்த நாகரீக பெண்ணும் சொல்ல மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய முகேஷ் கண்ணா

மேலும் வாட்ஸ்அப்பில் தனக்கும் இதுபோன்ற செய்திகள் வருவதாகக் கூறிய முகேஷ் இதுபோன்ற பெண்கள் உண்மையில் இருந்தால் அந்த சமூகம் நிச்சயம் வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் கூறியுள்ளார்.

அதேபோல் தனது இளமை காலத்தில் பெண்கள் இதுபோன்ற நிலைமை ஏற்படும் போது பெண்கள் வேண்டாம் என மறுக்கும் நிலை இருந்தது. தற்போது ஆண்கள் வேண்டாம் சொல்லும் அளவுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.அவரின் இந்த கருத்து கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.