பாஜக இலக்கு செந்தில் பாலாஜி அல்ல, மு.க.ஸ்டாலின்தான் : திருமாவளவன்

Thol. Thirumavalavan DMK
By Irumporai Jun 17, 2023 10:48 AM GMT
Report

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் பாஜகவின் இலக்காக உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

கோவையில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசும் போது, பா.ஜனதாவின் இலக்கு செந்தில் பாலாஜி அல்ல. மு.க.ஸ்டாலின்தான். அவருக்கு நெருக்கடி கொடுக்கத்தான் மோடியும், அமித்ஷாவும் கணக்கு போட்டுள்ளார்கள்.

பாஜக இலக்கு செந்தில் பாலாஜி அல்ல, மு.க.ஸ்டாலின்தான் : திருமாவளவன் | He Target Is Not Senthil Balaji

 முதலமைச்சருக்கு நெருக்கடி

நாடுமுழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். அதை தடுக்க முயற்சிக்கிறார்கள். ராகுல்தான் பிரதமர் என்று துணிந்து சொன்னார்.

இன்றும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறார். காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்கவும் காங்கிரசை பல வீனப்படுத்தும் முயற்சியிலும், உடைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்தான் விசாரணை அமைப்புகள் உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.