அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி - செவிலியர்கள் போராட்டம் தொடர்கிறது
அமைச்சருடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால் தங்கள் போராட்டம் தொடரும் என செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
கொரோனா காலகட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட செவிலியர்களுடன் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் பணி நிரந்தரம் செய்து தர இயலாது. மாவட்ட சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் இவர்களுக்கு பணி ஏற்பாடு செய்து தரப்படும். ஆரம்பத்தில் இவர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் தங்கள் போராட்டம் தொடரும் என செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.