சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் இவர் தான்...தோனி இல்லை - ஷாக் கொடுத்த கிரிஸ் கெயில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தான் என அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
ரூ 16 கோடிக்கு ஏலம் எடுத்த அணி நிர்வாகம்
2023 ஆண்டு ஐபிஎஸ் தொடருக்கான ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் யாரும் எதிர்பாரதவிதமாக பென் ஸ்டோக்ஸ், கெயில் ஜேமிசன் போன்றோரை வாங்கி அசத்தியது.
இந்த ஆண்டோடு எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் இருந்து விடைபெறலாம் என்று கூறப்படுகிறது. தோனிக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வியை கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி கொடுத்து ஏலம் எடுத்தனர். அனுபவம் வாய்ந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
தோனி ஓய்வு?
இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் சுவாரஸ்ய பதிலை கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தோனி இருக்கும் வரை அவரே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்.
சிஎஸ்கேவின் ஓய்வறையில் தோனி, பென் ஸ்டோக்ஸ் என்ற இரு பெரும் கிரிக்கெட் ஜாம்பவன்கள் உள்ளனர். என்னைப்பொறுத்தவரையில் பென் ஸ்டோக்ஸ் தோனிக்கு பின் அமர்ந்து அவரின் வழியில் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதாவது தோனி இந்தாண்டு ஓய்வு பெற மாட்டார். அவர் தொடர்ந்து இருப்பார் என்பது போல கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பென் ஸ்டோக்ஸ் சொல்லும் அறிவுரைகளை சிஎஸ்கே அணியின் இளம் வீரர்கள் கேட்க வேண்டும். அவர்களின் இருவரின் தலைமையில் சிறப்பாக இருக்கும்.
அணி நிர்வாகம் விளக்கம்
பென் ஸ்டோக்ஸின் அனுபவத்திற்கும் அவரின் செயல்பாட்டிற்கும் சிஎஸ்கேவின் கலாச்சாரத்தில் சரியாக பொருந்துவார் என நினைக்கிறேன் என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியிருந்தார். சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்று கூறவில்லை. ஆனால் தோனி தான் இதுகுறித்து இறுதி முடிவை எடுப்பார் எனக்கூறியிருந்தார்.