அதிரும் கர்நாடகா - பாலியல் புகாரில் சிக்கிய ஹெச்.டி.ரேவண்ணா அதிரடி கைது !!
கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினரான ஹெச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் புகார்
தேவகவுடாவின் மகன் ரேவண்னா மற்றும் அவரது மகனும் மக்களவை வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் புகாரில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோக்கள் வெளியான நிலையில், இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தை தாண்டி, நாடு முழுவதிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகள்களை ஏற்படுத்தியது.
கைது
பிரஜ்வல் ரேவண்ணா இந்தியாவில் இருந்து தப்பித்ததாக கூறப்படும் நிலையில், அவர் எப்போது இந்தியா திரும்பினாலும் அவர் கைது செயப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தற்போது ஹெச்.டி.ரேவண்ணா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரேவண்ணா வழக்கில் மைசூரில் கனமழை போன பெண், ரேவண்ணா உதவியாளரின் பண்ணை வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். இந்த குற்றசாட்டில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.