விடாத சீமான்..விஜயலக்ஷ்மி நேரில் ஆஜராக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
சீமான் தொடர்ந்த வழக்கில் தற்போது பெங்களுருவில் உள்ள நடிகை விஜயலக்ஷ்மி வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
விஜயலக்ஷ்மி - சீமான் விவகாரம்
நாம தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலக்ஷ்மி தன்னிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரை அளித்திருந்தார். ஆனால் தற்போது அதிரடியாக தனது புகாரை நடிகை விஜயலக்ஷ்மி வாபஸ் பெற்றார்.
அது குறித்து தெரிவித்த அவர், வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை.புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறி, சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். அதனை தொடர்ந்து சில வீடியோக்களை விஜயலக்ஷ்மி வெளியிட்டுள்ள நிலையில், அவர் பெங்களூரு மெனெடும் திரும்பியுள்ளார்.
நேரில் ஆஜராக உத்தரவு
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் தற்போது பெங்களுருவில் உள்ள நடிகை விஜயலக்ஷ்மி வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
முன்னதாக சென்னை வளசரவாக்க காவல நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.