முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கு : மீரா மிதுனை கைது செய்து விசாரியுங்கள் - உயர்நீதிமன்றம் அதிரடி
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி ஆடியோ பதிவிட்ட வழக்கில், நடிகை மீரா மிதுனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி ஆடியோ பதிவிட்டு சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
ஆடியோ பதிவிட்டதாக கூறும் நாளில் வேறொரு நிகழ்வில் கலந்துகொண்டு இருந்ததாகவும் தன் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறி மீரா மிதுன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், மீரா மிதுனை கைது செய்து விசாரிக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.