அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வித்தரத்தை உயர்த்த குழு: சென்னை உயர்நீதிமன்றம்

Tn government Chennai highcourt Government school education
By Petchi Avudaiappan Jun 07, 2021 10:04 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பினை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பள விகிதத்தை நிர்ணயிக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிக்காலத்தையும் சேர்த்துக் கொள்ள கோரி தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக கல்வித்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இரா.நீலகண்டன், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கல்வித்தரத்தினை உயர்த்தவும் - அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு அனைத்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வித்தரத்தை உயர்த்த குழு: சென்னை உயர்நீதிமன்றம் | Hc Order To Tn Govt For Standard School Education

அப்போது அரசுப் பள்ளிகளை அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து உள்கட்டமைப்பினை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வலியுறுத்தினார்.

இதையடுத்து அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும் உள்கட்டமைப்பினை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள, அரசுப் பள்ளிகளை அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து உள்கட்டமைப்பினை மேம்படுத்துவது குறித்தும் கல்வித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இந்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.