கோயில் நிலத்தை அபகரிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

chennaihighcourt templeland
By Petchi Avudaiappan Sep 15, 2021 07:38 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 கோயில் நிலத்தை அபகரித்தால் குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் பேயாழ்வர் தேவஸ்தான கோயில் அறங்காவலர் தற்காலிக நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவர்மீது சட்டரீதியான நடவடிக்கையை தொடரலாம் என்றும் அறநிலையத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதி, கோயில் நிலம், சொத்து, நகையை மீட்கும் நடவடிக்கையை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்றும், அந்த பிரிவை பொதுமக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி மற்றும் மொபைல் எண்ணை அரசு அறிவிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.