யூடியூபர் மதன் பேசியதை கேட்டுவிட்டு முன்ஜாமீன் கேட்கவும் - கடுப்பான நீதிபதி

Chennai high court Youtuber madan
By Petchi Avudaiappan Jun 17, 2021 11:40 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

 யூடியூபர் மதன் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

யூடியூபில் மதன் என்பவர், சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் 'பப்ஜி' போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தை டாக்சிக் மதன் 18+ என்னும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் விளையாடும் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஒரு கட்டத்தில் மதன் யூடியூப் சேனல் மீது, சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன.

யூடியூபர் மதன் பேசியதை கேட்டுவிட்டு முன்ஜாமீன் கேட்கவும் - கடுப்பான நீதிபதி | Hc Condemn To Bail For Youtuber Madan

இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். நேரில் ஆஜராகாத பப்ஜி மதன் தலைமறைவானார்.இந்நிலையில் முன் ஜாமீன் கோரி மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

யூடியூபர் மதன் பேசியதை கேட்டுவிட்டு முன்ஜாமீன் கேட்கவும் - கடுப்பான நீதிபதி | Hc Condemn To Bail For Youtuber Madan

ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளை கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார் எனவும், மதனின் மனைவி கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், தெரிவித்து, முன் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி தண்டபாணி, யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா என அவரின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். ஆரம்பமே கேட்க முடியாத வகையில் இருப்பதாகவும், அந்த பதிவுகளை முழுமையாக கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.