அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் - தடையை நீக்கிய நீதிமன்றம்
hc permit by election in amabasamuthiram, perundhurai: அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி
2026 தமிழ்நாடுசட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 6 வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.

இதில், 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது.
முதல்வர் விஜய் வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, காலமான வி.எஸ்.பாபுவின் கொளத்தூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை உள்ளிட்ட 6 தொகுதிகள் காலியாக உள்ளன.
இதில் பல்வேறு வழக்குகள் காரணமாக 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை இருந்தது.
இந்நிலையில், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மீதமுள்ள திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் வழக்குகள் முடியும் வரை தடை நீடிக்கிறது.