சென்னை அணியில் களமிறங்கும் ஆஸ்திரேலிய வீரர் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் சென்னை அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் பல வீரர்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை காரணம் காட்டி விலகியுள்ளனர். இதனால் அனைத்து அணிகளும் முக்கிய வீரர்களை இழந்து திணறியுள்ளது.அப்படியான சூழலில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இந்த ஆண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்காக விளையாடுவதை உறுதி செய்துள்ளார்.
முதல் பாதி போட்டிகளில் பங்கேற்காத அவர் 2ஆம் பாதி போட்டிகளில் பங்கேற்பது சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.இதேபோல் முதல் பாதியில் விளையாடாத வீரர்கள் ஃபிட்டாகவும் முழு உடற்தகுதியுடனும் இருந்தால் 2ஆம் பாதி போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.