பிரபல மாலில் நாய்க்கு பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது
பிரபல மால் ஒன்றில் உணவு டெலிவரி செய்யும் நபர் ,ஒரு நாயுடன் உடலுறவு கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய் பாலத்காரம்
மும்பையின் போவாய் பகுதியில் பிரபலமான மால் ஒன்று உள்ளது. இந்த நிலையில் அந்த மாலில் உள்ள பாரின் பால்கனியில் 6 மாத நாயுடன் டெலிவரி பாய் ஒருவர் உடலுறவு வைத்துக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெலிவரி ஊழியர் கைது
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் விலங்குகள் உரிமை அமைப்பின் தலைவர் விஜய் மொஹானி அனுப்பிய வீடியோ அதாரத்தின் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விஜய்மொஹானி கூறுகையில் , இந்த சம்பவத்தால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நாயின் அந்தரங்க உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறை
இது குறித்து போலீசார் கூறுகையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐபிசி 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் மற்றும் விலங்குகளை வதை செய்யும் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதே போன்ற சம்பவம் இந்த பகுதியில் நடைபெறுவது இரண்டாவது முறையாகும் , கடந்த ஆண்டு இதே இடத்தில் நூரி என்ற நாயை பலாத்காரம் செய்து அந்த நாயின் அந்தரங்க பகுதியில் குச்சியை சொருகி பலாத்காரம் செய்தது குறிப்பிடத் தக்கது