ஐஸ்வர்யாவுக்கு இருந்த பாசம் கூட தனுஷூக்கு இல்ல போல - ஆதாரத்துடன் பேசும் ரசிகர்கள்
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்தில் வெளியாகியுள்ள மேலும் ஒரு தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, ஐஸ்வர்யாவின் தந்தையும், சூப்பர்ஸ்டாருமான ரஜினியும் இவர்கள் இணைப்பில் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது வடசென்னை படத்தையொட்டி இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய தனுஷ் இதுவரை ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டது இல்லை. ஆனால் ஐஸ்வர்யா பலமுறை தனுஷூடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ஏன் தனுஷ் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் இதுவரை பதிவிடவில்லை என கேள்வியெழுப்பி வருகின்றனர்.