சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை - குற்றவாளிக்கு தூக்கு

uttarpradesh hathrasrapecase
By Petchi Avudaiappan Sep 24, 2021 07:15 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி 14 வயது சிறுமியை மோனு தாக்கூர் என்பவன் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றான். அவனை கைது செய்த போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354, 326, 452, 302, 376, போக்சோ ஆகியவற்றின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட மோனு தாக்கூருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த குற்றம் நடந்து 42 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் எரித்து கொன்ற வழக்கு என்பதால், எஸ்.பி. வினீத் ஜெய்ஸ்வால் நேரடி விசாரணை நடத்தியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சாட்சியங்களை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை பெற்றுத் தரப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 5 மாதத்தில் விரைவாக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் நீதிபதிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.