எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்க முடியாது : பாஜக அண்ணாமலை
இடைத்தேர்தல் குறித்து எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இளங்கோவனுக்கு தகுதி இல்லை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று உள்ள நிலைமையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தலில் நின்றால் கூட மாவட்ட நிர்வாகிகள் அவர் பின்னால் துணை நிற்பார்களா என்பது சந்தேகம்தான் என்று கூறிய அண்ணாமலை அவருக்கு மற்ற கட்சியை பற்றி பேச தகுதி இல்லை என விமர்சித்தார் .
அண்ணாமலை முடிவு
மேலும், இடைத்தேர்தல் குறித்து எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்க முடியாது. நிற்கும் வேட்பாளர், திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்கும் பலம் பொருத்திய வேட்பாளராக இருக்க வேண்டும். இன்னும் சில நாட்களில் நல்ல முடிவு வெளிவரும் என அண்ணாமலை கூறினார்.