கிண்டல் செய்த ரசிகரை பயங்கரமாக தாக்கிய பாக்.வீரர் ஹசன் அலி... - வைரலாகும் வீடியோ...!

Cricket Viral Video Pakistan national cricket team
By Nandhini Dec 07, 2022 07:08 AM GMT
Report

மைதானத்தில் தன்னை கிண்டில் செய்த ரசிகரை பாகிஸ்தான் முன்னணி வீரர் ஹசன் அலி அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி -

பாகிஸ்தான் வீரர் ஹசன் (28) அலி துடுப்பான முன்னணி வீரராக வலம் வருகிறார். இவர் 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் சியல்கோட் அணியில் அறிமுகமானார். 2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்.

கேட்ச் தவற விட்ட ஹசன் அலி

2021ம் ஆண்டு யுஏயில் நடந்த டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் மேத்யூ வேட்டின் மிக முக்கியமான கேட்சை தவறவிட்டார்.

இப்போட்டியில், இவர் தவற விட்ட பந்தால், இதனையடுத்து விளையாடிய வேட் அடுத்தடுத்து 3 சிக்சர்களை அடித்து ஆஸ்திரேலியவை வெற்றி பெறச் செய்தார்.

இதனால், அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இதனையடுத்து, சமீபத்தில் ஹசன் அலிக்குபாகிஸ்தான் அணியில் 3 வடிவிலான போட்டிகளிலும் இவரை சேர்க்கவில்லை. இதனால் அவர் உள்ளூர் போட்டிகளில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி விளையாடிக் கொண்டு வருகிறார்.

hassan-ali-fight-with-the-crowd-pakistan

ரசிகரை அடிக்கப் பாய்ந்த ஹசன் அலி

இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியில் ஹசன் அலி விளையாடி கொண்டிருந்தார். அப்போது, பவுண்டரி லைனில் இருந்த ரசிகர்கள் கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் மேத்யூ வேட்டின் கேட்ச்சை தவறவிட்டதுக்கு அவரை கிண்டல் செய்துக் கொண்டிருந்தனர்.

முதலில் பொறுமையாக இருந்த ஹசன் அலி தன் விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். மீண்டும் மீண்டும் ரசிகர்கள் வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தனர். இதனால், ஹசன் அலி சற்று கோபமடைந்தார். இருந்தாலும் விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடிக் கொண்டிருந்தார்.

இதன் பின்பு போட்டி முடிவடைந்தவுடன் நேரடியாக பார்வையாளர்கள் இடத்திற்கு சென்று கிண்டல் செய்தவரை கடுமையாக உதைத்து தாக்கினார். அப்போது, பார்வையாளர்கள் சிலர் ஹசன் அலியை தாக்க முயன்றனர். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு இருந்த பாதுகாவலர்கள் ஹசன் அலியை விலக்கிவிட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.