“அவரோட பந்துவீச்சு தாங்க சமாளிக்குறது ரொம்ப கஷ்டம்” - தெ.ஆ முன்னாள் ஜாம்பவான் ஹாஷிம் அம்லா ஓப்பன் டாக்
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஹாஷிம் அம்லா தான் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் சமாளிப்பதற்கு கடினமான இருந்த பந்துவீச்சாளர் குறித்து தெரிவித்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி ஜொஹான்னெஸ் மைதானத்தில் நடைபெற்றது, இந்த போட்டியின் 4வது நாள் ஆட்டம் மழையின் காரணமாக சற்று தாமதமாக நடைபெற்றது.
அப்பொழுது நிக்கோலஸ், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஹாஷிம் அம்லா ஆகிய மூவருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
அதில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஹாஷிம் அம்லாவிடம் நீங்கள் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் எந்த பந்துவீச்சாளர் சமாளிப்பதற்கு கடினமான பந்துவீச்சாளர்..? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஹசிம் அம்லா பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃபை தெரிவித்தார்.
மேலும் முகமது ஆசிஃப் குறித்து ஹசிம் அம்லா பேசுகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப் பந்தை வைத்து வித்தை காட்டும் ஒரு மந்திரவாதி,
அவருடைய பந்துவீச்சை பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும் ஆனால் அதை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது மிகப் பெரும் சிக்கலாக அமையும்.
மேலும் ஆசிஃப்பின் பந்துவீச்சை குறித்து பேசிய ஹசிம் ஆம்லா,
"ஆசிஃப்பின் பந்து வீச்சு எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமானது அவர் இன்ஸ்விங் வீசப்போகிறார் என்று நான் தயாராக இருப்பேன் ஆனால் அப்பொழுது பந்து அவுட்ஸ்விங் ஆகி அவுட்டாகிவிடுவேன்.
அதேபோன்று அவுட் ஸ்விங் வீசுகிறார் என்று நினைப்பேன் அப்பொழுது பந்து இன்ஸ்விங் ஆகி விடும்" என்று ஹாஷிம் அம்லா, ஆசிஃப் பந்து வீச்சு குறித்து பாராட்டு பேசியிருந்தார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் சர்வதேச கிரிக்கெட் தொடரில் 23 டெஸ்ட் போட்டிகள் 38 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடி 165 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
ஆனால் இவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சர்வதேச போட்டியில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.
இதனால் ஆசிஃப்பிற்கு அதற்கு மேல் விளையாட முடியாமல் போனது ஒருவேளை இவர் அந்த தவறை செய்யாமல் விளையாடி இருந்தால் இன்று தனது பந்துவீச்சால் பல சாதனைகளைப் படைத்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
