வேலையின்மை விகிதத்தை குறைக்குமா? ஹரியானாவின் அரசியல் களம்

BJP
By Sumathi Feb 20, 2023 05:49 AM GMT
Report

ஹரியானா ஒரு வட இந்திய மாநிலம். 1966-ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. டெல்லி நகரை வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் சூழ்ந்துள்ளமையால், அரியானாவின் சில பகுதிகள், நாட்டுத் தலைநகர் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹரியானா

வேலையின்மை விகிதத்தை குறைக்குமா? ஹரியானாவின் அரசியல் களம் | Haryana Politics In Tamil

ஹரியானாவின் தலைநகர் சண்டிகர்.பஞ்சாப் மாநில தலைநகராகவும் உள்ளது. இங்கு தனிநபர் வருமானம் ரூ 29,887 என்ற அளவில் தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 பி. டி. சர்மா

இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த பி. டி. சர்மா, அரியானாவின் முதலாவது முதலமைச்சர். 1966 முதல் 1967 வரையிலான 142 நாட்கள் ஆட்சியில் இருந்தவர்.

வேலையின்மை விகிதத்தை குறைக்குமா? ஹரியானாவின் அரசியல் களம் | Haryana Politics In Tamil

 பிரேந்தர் சிங்

அதன்பின், பிரேந்தர் சிங் 223 நாட்கள் தனது ஆட்சியைத் தொடர்ந்தார். தொடர்ந்து, ஹரியானா குடியரசு தலைவர் ஆட்சியின் கீழ் வந்தது.

வேலையின்மை விகிதத்தை குறைக்குமா? ஹரியானாவின் அரசியல் களம் | Haryana Politics In Tamil

தேவிலால்

அதற்கு பிறகான ஆட்சியில் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருந்தவராக அறியப்படுபவர் தேவிலால். 1958 இல் அரியானாவைப் பஞ்சாப் மாநிலத்திலிருந்து பிரித்து புதிய மாநிலத்தைத் தோற்றுவிக்க முக்கியப் பங்கு வகித்தவர். 1971 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, 1974இல் சிர்சா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

வேலையின்மை விகிதத்தை குறைக்குமா? ஹரியானாவின் அரசியல் களம் | Haryana Politics In Tamil

இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலத்தில், மிசா சட்டத்தில் கைதாகி 19 மாதங்கள் சிறையில் இருந்தவர். 1977இல் ஜனதா கட்சியில் இணைந்து, அரியானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மாநில முதல்வர் ஆனார். 1987இல் லோக் தளம் எனும் மாநில கட்சியைத் தோற்றுவித்து, அரியானாவின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 85 தொகுதிகளில் இவரது லோக் தள கூட்டணி வெற்றி பெற்று இரண்டாம் முறையாக அரியானா மாநில முதல்வர் ஆனார்.

பஜன்லால்

இவரைத் தொடர்ந்து, பஜன்லால் 1979 முதல் 1985 மற்றும் 1991 முதல் 1996 வரை 2 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். அனைத்துத் தரப்பினரும் விரும்பிய மக்கள்தலைவராக விளங்கினார். இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் அரியானா தலைவராக விளங்கிய பஜன் லாலின் ஆதிக்கம் 1996ஆம் ஆண்டு காங்கிரசு தழுவிய தோல்விக்குப் பிறகு சரியத் தொடங்கியது.

வேலையின்மை விகிதத்தை குறைக்குமா? ஹரியானாவின் அரசியல் களம் | Haryana Politics In Tamil

இதனை அடுத்து 2007ஆம் ஆண்டு தாம் காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சியை, அரியானா ஜாங்கிட் காங்கிரசு, துவக்குவதாக அறிவித்தார். 2011ல் மாரடைப்பு காரணமாக காலமானார்.

பூபேந்தர் சிங் ஹூடா

2005ஆம் ஆண்டு காங்கிரசு பெற்ற வெற்றியின்போது ஜாட் தலைவரான பூபேந்தர் சிங் ஹூடா முதலமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டு நடந்த மாநிலச் சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு இரண்டாம் முறையாக அக்டோபர் 2009ல் முதல்வராக பொறுப்பேற்றார். 2001 முதல் 2004 வரை அரியானா சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றினார்.

வேலையின்மை விகிதத்தை குறைக்குமா? ஹரியானாவின் அரசியல் களம் | Haryana Politics In Tamil

1996-2001 காலத்தில் அரியானா மாநில காங்கிரசுக் கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.பல விவசாயிப் போராட்டங்களை முன்னின்று நடத்தி உள்ளார்.பஞ்சாப் மற்றும் அரியானா வக்கீல்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். ஆனால், பூபேந்தர் தமது தொகுதிகளான ரோதக் மற்றும் சோனேபெட் மாவட்டங்களின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறார், தென் அரியானா மற்றும் வட அரியானா பகுதிகளை புறக்கணிக்கிறார் என்று எதிர்கட்சிகளால் பெருமளவில் குற்றம் சாட்டப்பட்டது.

மனோகர் லால் கட்டார்

அதன்பின் தற்போது, கர்னால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக உள்ளார். 1977ஆம் ஆண்டில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் சேர்ந்தார். 1980-இலிருந்து 1994 இல் பாரதிய ஜனதா கட்சியில் இணையும்வரை இயக்கத்தின் முழு நேரப் பிரசாரகராக 14 ஆண்டுகள் செயற்பட்டார். 2000-2014 காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அரியானா மாநிலப் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார்.

வேலையின்மை விகிதத்தை குறைக்குமா? ஹரியானாவின் அரசியல் களம் | Haryana Politics In Tamil

2014 மக்களவைத் தேர்தலில், அரியானா மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராகவும் செயல்பட்டார். அண்மையில், பழைய ஓய்வூதியக் கோரிக்கை வைத்த குற்றத்திற்காக அரசு ஊழியர்கள் மீது தடியடி நடத்தி விரட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வேலையின்மை 

இந்நிலையில், வேலையின்மை விகிதத்தில் ஹரியானா மாநிலத்தில் மிக மோசமாக 37.4% என்ற அளவுக்கு வேலையின்மை விகிதமானது விரிவடைந்துள்ளது. அதிக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதும், வேலை சந்தையில் நுழையும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதும்,

வேலையின்மை விகிதத்தை குறைக்குமா? ஹரியானாவின் அரசியல் களம் | Haryana Politics In Tamil

2024ஆம் ஆண்டு தேசியத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.