பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள்; சுவர் ஏறி குதித்து பிட் வழங்கிய உறவினர்கள் - வீடியோ வைரல்!

Viral Video Haryana
By Sumathi Mar 07, 2024 12:50 PM GMT
Report

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உறவினர்கள் பிட் வழங்கி உதவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்தேர்வு

ஹரியானாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 27 ம் தேதி தொடங்கிய இந்த தேர்வு வரும் 26ம் தேதி வரை ஒருமாதம் தேர்வு நடைபெறவுள்ளது.

haryana

இதனைத் தொடர்ந்து, பறக்கும் படைகள் தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டாரு பகுதியில் உள்ள சந்திரவதி என்ற பள்ளியில் தேர்வு தொடங்கியதும் வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுகிறது.

இதில் இருந்து தான் கேள்வியே..டென்ஷன் வேண்டாம் - +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

இதில் இருந்து தான் கேள்வியே..டென்ஷன் வேண்டாம் - +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

அதிர்ச்சி வீடியோ

இதனை தொடர்ந்து, பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் உயிரை பணயம் வைத்து, மாணவர்கள் காப்பி அடிக்க உதவி புரிந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து உரிய விசாரணைக்கு நடத்துவதாக மாவட்ட கல்வி அதிகாரி பரம்ஜித் சாஹல் தெரிவித்துள்ளார்.