விவாகரத்து பெற்ற கணவன்; மனைவியின் உருவ பொம்மையை வைத்து.. நள்ளிரவில் செய்த வினோத சம்பவம்!
மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை இளைஞர் ஒருவர் கேக் வெட்டி கொண்டாடிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹரியானா
இந்தியாவில் திருமணம் என்பது திருவிழாபோன்று கொண்டாடக் கூடிய நிகழ்ச்சி. புதிய உறவினை வரவேற்கும் விதமாக உற்றார் உறவினர் முன்னிலையில் தொடங்குவது வழக்கம்.
அத்தகைய திருமணப் பந்தத்தை ஆயுள் வரை தொடரும் மரபுள்ள போது, யாரும் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணமாட்டார்கள்.இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை இளைஞர் ஒருவர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மஞ்ஜீத். இவருக்கும் கோமல் என்ற பெண்ணுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
வினோத சம்பவம்
இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் மஞ்ஜீத் தனது மனைவியிடம் முடிவு செய்துள்ளார். இதற்காக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குப் பதிவு செய்து இன்று விவாகரத்து பெற்றார்.
இதனைக் கொண்டாடும் வகையில் , பேனர் அடித்து , மனைவியின் உருவ பொம்மையை வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படத்தை மஞ்ஜீத் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் வரலானதைத் தொடர்ந்து இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.