வீட்டை விட்டு ஓடி வருபவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும்...அசத்தல் சலுகையால் குவியும் ஜோடிகள்!
ஹரியானா மாநிலத்தில் இயங்கும் கடை ஒன்றில் வீட்டை விட்டு ஓடி வரும் காதல் ஜோடிகளுக்கு குறைந்த செலவில் திருமணம் செய்து வைக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அறிவிப்பு பலகையில் தொடர்பு எண்களும் வழங்கபட்டிருந்தன.
பெற்றோர் சம்மதிக்காததால் வீட்டை விட்டு வெளியே வரும் காதல் ஜோடிகளுக்கு உதவி செய்வதற்காக ஒரு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் பஞ்குலா பகுதியில் அமைந்துள்ள ஒரு கடைக்கு சென்று காதல் ஜோடிகள் திருமணம் செய்ய வேண்டும் என கூறினால், அவர்களுக்கான திருமண ஆடை, தாலி, போட்டோகிராப், திருமணப்பதிவு, வழக்கறிஞர் செலவு என அனைத்தும் செய்து தரப்படுகிறது.
இந்த திருமண செலவு ரூ.5,100 முதல் ரூ.16,000 வரை ஜோடிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பேக்கேஜ்கள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் நாம் திருமணம் செய்யவேண்டும் என சொன்னால் இவை அனைத்தும் 2 நாளில் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர். இதுவரை இந்த கடை மூலம் மாதத்திற்கு 70-80 திருமணங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அதோடு, இந்த கடைக்காரர்கள் திருமணம் செய்பவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தால், நீதிமன்றத்தில் ஆஜராகி இவர்களுக்கு பாதுகாப்பு பெற்று கொடுப்பதும் உண்டு.