கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தியை விமர்சித்த ஹரியானா அமைச்சர்
corona
rahulgandhi
congress
haryana
critics
By Praveen
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுலுக்கு டெல்லியில் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டால் ஹரியானா வரலாம் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து விமர்சித்துள்ள ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
கொரோனா தொடங்கிய நாள்முதல் ராகுல் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார். ஆனால், தற்போது அவருக்கே கொரோனா உறுதியாகியுள்ளது. டெல்லியில் சிகிச்சைக்காக சிரமம் ஏற்பட்டால் ஹரியானாவுக்கு வரலாம்.
மேலும் அவருக்கு சிறந்த சிகிச்சை அளிப்போம் என விமர்சித்துள்ளார்.