இரண்டாவது போட்டியிலேயே மிக மோசமான சாதனை படைத்த ஹர்சல் பட்டேல்
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணி வீரர் ஹர்சல் பட்டேல் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதனிடையே 3வது டி20 போட்டியில் ஹிட் விக்கெட் மூலம் விக்கெட்டை இழந்த இந்திய அணியின் ஹர்சல் பட்டேல் இதன் மூலம் மோசமான சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.ஸ்டம்பில் தனது பேட்டால் அடித்து கொண்டு ஹிட் விக்கெட் முறையில் விக்கெட்டை இழந்தார் ஹர்சல் பட்டேல்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் கே.எல் ராகுலுக்கு அடுத்தபடியாக ஹிட் விக்கெட் முறையில் விக்கெட்டை இழந்த இரண்டாவது வீரர் என்ற மோசமான வரலாற்றில் அவர் இடம்பிடித்துள்ளார்.