"எனக்கு மிகவும் பிடித்த கேப்டன் தோனி தான்..." - ஹர்சல் பட்டேல்
2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இம்முறை ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
இதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக உள்ளது. அதற்கு முன்பாக அடுத்த மாதம் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது.
வீரர்களின் ஏலத்திற்கு முன்பாக 10 ஐபிஎல் அணிகளும் தங்களுடைய அணியில் சில வீரர்களை தக்கவைத்துள்ளனர்.
இதன் காரணமாக ஐபிஎல் ஏலத்தில் யார் யார் எந்த அணியில் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஹர்சல் பட்டேல் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
“எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். அவருடைய தலைமையின் கீழ் சென்னை அணியில் ஆட வேண்டும் என்பது என்னுடைய மிகப் பெரிய விருப்பம்” எனக் கூறியுள்ளார்.