ISRO தலைவர் சோம்நாத் சம்பளம் இவ்வளவுதானா? நான் 5 கோடி கொடுப்பேன் - பிரபல தொழிலதிபர் பகீர்!

India Indian Space Research Organisation ISRO
By Jiyath Sep 13, 2023 08:20 AM GMT
Report

இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் மாத சம்பளம் குறித்த தொழிலதிபரின் ட்வீட் ஒன்று ஆதரவு பெற்றுள்ளது. 

இஸ்ரோ தலைவரின் சம்பளம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அண்மையில் நிலவுக்கான 'சந்திரயான் 3' திட்டத்திலும், சூரியனுக்கான 'ஆதித்யா எல்1' என்ற திட்டத்திலும் வெற்றிபெற்று சாதனை படைத்தது. இஸ்ரோவின் தற்போதைய தலைவராக விஞ்ஞானி சோம்நாத் உள்ளார்.

ISRO தலைவர் சோம்நாத் சம்பளம் இவ்வளவுதானா? நான் 5 கோடி கொடுப்பேன் - பிரபல தொழிலதிபர் பகீர்! | Harsh Goenka Comment Isro Chief Somnath Salary I

இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் ஊக்கமளிக்கும் வகையிலான கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு வரும் ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் 'ஹர்ஷ கோயங்கா' தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் சம்பளம் குறித்த பதிவொன்றை வெளியிட்டார்.

அதில் 'சோமநாத்தின் மாத சம்பளம் 2.5 லட்சம் ரூபாய். இது சரியா அல்லது நியாயமா?. அவரைப் போன்றவர்கள் பணத்திற்கு அப்பாற்பட்ட காரணிகளால் உந்தப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்வோம்.

ISRO தலைவர் சோம்நாத் சம்பளம் இவ்வளவுதானா? நான் 5 கோடி கொடுப்பேன் - பிரபல தொழிலதிபர் பகீர்! | Harsh Goenka Comment Isro Chief Somnath Salary I

அவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மீதான ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புக்காகவும், தங்கள் நாட்டின் பெருமைக்காகவும், தங்கள் நாட்டின் பங்களிப்பிற்காகவும், தங்கள் நோக்கத்தை அடைவதில் தனிப்பட்ட நிறைவுக்காகவும் செய்கிறார்கள். அவரைப் போன்ற அர்ப்பணிப்புள்ள மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

திடீரென வயல்வெளியில் தரையிறங்கிய விமானம்; அலறிய 159 பயணிகள் - என்ன நடந்தது?

திடீரென வயல்வெளியில் தரையிறங்கிய விமானம்; அலறிய 159 பயணிகள் - என்ன நடந்தது?

நெட்டிசன்கள் கருத்து

இந்த பதிவானது நல்ல வரவேற்பை பெற்று, சோம்நாத் போன்ற தலைவர்களின் அர்ப்பணிப்பு குறித்து நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். பலர் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ISRO தலைவர் சோம்நாத் சம்பளம் இவ்வளவுதானா? நான் 5 கோடி கொடுப்பேன் - பிரபல தொழிலதிபர் பகீர்! | Harsh Goenka Comment Isro Chief Somnath Salary I

மேலும் இந்த பதிவுக்கு கீழ் நெட்டிசன் ஒருவர் "ஓருவேளை இஸ்ரோ ஒரு தனியார் நிறுவனமாக இருந்து, நீங்கள் அதை வழிநடத்தினால், சோம்நாத்திற்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த 'ஹர்ஷ கோயங்கா '5 கோடி' என்று பதிலளித்துள்ளார்.