ஹேரி- மேகன் பேட்டியை மோசமாக விமர்சித்த அரண்மனை வட்டாரம்!
ஹரி மேகன் பேட்டியை சர்க்கஸ் என அரண்மனை வட்டாரம் வேடிக்கையாக விமர்சித்துள்ள நிலையில், அந்த சர்க்கஸை பார்க்க எல்லாம் மகாராணியாருக்கு நேரமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹரி மேகன் பேட்டி சில மணி நேரம் முன்பு அமெரிக்காவில் ஒளிபரப்பான நிலையில், அது பிரித்தானியாவில் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிலையில், மகாராணியார் அந்த பேட்டியை அலட்சியப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராணியாரை பொருத்தவரை, அவர் இரண்டு விடயங்கள் மீது கவனம் செலுத்த இருக்கிறார்.
ஒன்று, இன்று பிரித்தானியாவில் பள்ளிகள் திறக்க இருக்கின்றன, அதன் மீதும் தடுப்பூசி திட்டம் மீதும்தான் மகாராணியார் கவனம் செலுத்த இருக்கிறார். வேலை இருப்பதால் அவருக்கு இந்த சர்க்கஸ் பேட்டியைப் பார்க்க நேரமில்லை. இரண்டாவதாக, மகாராணியாரின் கணவர் பிலிப் மருத்துவமனையில் இருக்கிறார்.
ஆக, அலுவல் மற்றும் கணவர் குறித்து சிந்திக்கத்தான் அவருக்கு நேரம் இருக்கிறதேயொழிய, ஹரி மேகன் பேட்டியைப் பார்க்க அவருக்கு நேரமில்லை என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.