பொய் சொல்லி மாட்டிக்கொண்ட ஹரி- மேகன் தம்பதி: உண்மைகள் அம்பலம்

baby United Kingdom meghan harry
By Jon Mar 26, 2021 01:25 PM GMT
Report

தங்கள் அதிகாரப்பூர்வ திருமணம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, தங்கள் வீட்டில் தாங்கள் இரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக கூறியது உண்மையில்லை என ஒப்புக்கொண்டுள்ளனர் ஹரி மேகன் தம்பதியர்.

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ஓபரா விஃப்ரேயுடனான பேட்டியில், பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் தாங்கள் தங்கள் அதிகாரப்பூர்வ திருமணம் தேவாலயத்தில் நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்பே தங்கள் வீட்டில் இரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும், இங்கிலாந்து திருச்சபைத் தலைவர் அதை நடத்திவைத்ததாகவும் தெரிவித்திருந்தனர். இந்த விடயம் பிரித்தானிய மக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அப்படியானால் மக்களின் வரிப்பணம் 32 மில்லியன் பவுண்டுகள் செலவில் மீண்டும் தேவாலயத்தில் திருமணம் செய்து மக்களுக்கு வரிச்சுமையை ஏற்படுத்தியது ஏன் என கொந்தளித்தனர் மக்கள். இந்நிலையில், ஹரியும் மேகனும் தங்கள் வீட்டில் திருமணம் செய்துகொள்ளவில்லை என இங்கிலாந்து திருச்சபைத் தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட ஹரி- மேகன் தம்பதி: உண்மைகள் அம்பலம் | Harry Meghan Couple Caught Lying Facts Exposed

அப்படி ஒரு விடயம் இங்கிலாந்தில் நடக்கவும் முடியாது, காரணம், ஒரு முறை திருமணம் செய்தபின் மீண்டும் திருமணம் செய்யவேண்டுமானால், அதற்கான நடைமுறை சிக்கலானது. ஆகவே, பாதிரியார் ஒருவர் இங்கிலாந்து திருச்சபைத் தலைவரின் அலுவலகத்தை தொடர்புகொண்டு இது குறித்து விசாரித்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள இங்கிலாந்து திருச்சபைத் தலைவரின் அலுவலகம், இங்கிலாந்து திருச்சபைத் தலைவரான Justin Welby தனிப்பட்ட திருமணங்களை நடத்தி வைப்பதில்லை என்றும், மேகன் ஒரு அமெரிக்கர், அவருக்கு இதெல்லாம் புரியாது என்றும் பதிலளித்துள்ளது. இதற்கிடையில், நேற்று திருமண பதிவு அலுவலகம் முதன்முறையாக ஹரி மேகனின் திருமணச் சான்றிதழை வெளியிட்டுள்ளது. அதில், ஹரியும் மேகனும் 2018ஆம் ஆண்டு, மே மாதம் 19ஆம் திகதி விண்ட்சர் மாளிகையில் திருமணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு திருமணம் நடக்கவேண்டுமென்றால், அதற்கு இரண்டு சாட்சியங்கள் வேண்டும், அதன்படி பிரித்தானிய இளவரசரும், ஹரியின் தந்தையான சார்லசும், மேகனின் தாயான Doria Loyce Raglandம் திருமண சான்றிதழில் கையொப்பமிட்டுள்ளார்கள்.

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட ஹரி- மேகன் தம்பதி: உண்மைகள் அம்பலம் | Harry Meghan Couple Caught Lying Facts Exposed

ஆகவே, அதுதான் முறையான திருமணம் நடந்ததற்கான ஆதாரம். ஆகவே, திருமண பதிவு அலுவலக முன்னாள் அலுவலரான Stephen Borton என்பவர், ஹரி மேகன் திருமணம், மே மாதம் 19ஆம் திகதிதான் நடந்துள்ளது. ஒருவேளை, அவர்கள் திருமணத்தின்போது செய்யப்படும் வாக்குறுதிகளை தங்கள் வீட்டில் எழுதி ஒருவருக்கொருவர் கொடுத்திருக்கலாம், அல்லது திருமணத்திற்கு ஒரு ஒத்திகை வேண்டுமானால் பார்த்திருக்கலாம் என்கிறார்.

இங்கிலாந்து திருச்சபைத் தலைவர் இது குறித்து நேரடியாக எதுவுமே கூறவில்லை. எனவே, இப்போதைக்கு அவர் இதை தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில், இப்படி தங்கள் குட்டு வெளிப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து, ஹரி மேகன் தம்பதியரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், தம்பதியர் கூறியதுபோல அவர்களது திருமணத்துக்கு மூன்று நாட்கள் முன்பே இரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக கூறியது உண்மையில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.  

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட ஹரி- மேகன் தம்பதி: உண்மைகள் அம்பலம் | Harry Meghan Couple Caught Lying Facts Exposed

அது திருமணம் அல்ல, ஹரியும் மேகனும் தங்களுக்குள் தனிப்பட்ட முறையில் திருமண வாக்குறுதிகளை பரிமாறிக்கொண்டார்கள், அவ்வளவுதான் என அவர்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம், பிரித்தானியர்களின் கோபத்தை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் மேலும் அதிகரித்துள்ளது.

காரணம், மேகன் திருமணம் குறித்து கூறிய விடயமே பொய்யாக இருக்குமானால், அவர் பேட்டியில் கூறிய எந்த விடயத்தை நம்பமுடியும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்!