இது தான் இளவரசர் ஹரியின் திட்டம்? உண்மையை அம்பலமானது

christmas prince harry elizabeth queen
By Balamanuvelan Sep 23, 2021 10:46 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in உலகம்
Report

ராஜ குடும்பத்துடனான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இளவரசர் ஹரியும் மேகனும் தங்கள் குழந்தைகளை பயன்படுத்த இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதை ஒரு காரணமாக பயன்படுத்தி, அந்த நேரத்தில் தங்கள் குழந்தைகள், ஆர்ச்சியையும் லிலிபெட்டையும் அழைத்துக்கொண்டு பிரித்தானியாவுக்கு வர ஹரியும் மேகனும் திட்டமிட்டுள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய இது ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது என்கிறார் Katie Nicholl என்னும் அந்த ராஜ குடும்ப நிபுணர்.

இதற்கு முன் 2018ஆம் ஆண்டுதான் ஹரி தம்பதி பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.

இது தான் இளவரசர் ஹரியின் திட்டம்? உண்மையை அம்பலமானது | Harry Meghan Bring Archie Lilibet Uk Christmas

பின்னர் அவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், அதற்குப் பிறகு இரண்டு முறை ஹரி மட்டும் பிரித்தானியாவுக்கு வந்தாலும், மேகனோ, குழந்தைகளோ அவருடன் வரவில்லை.

இம்முறை அவர்கள் குழந்தைகளுடன் பிரித்தானியாவுக்குத் திரும்பும் நிலையில், அது மூன்று மாதக் குழந்தையான குட்டி இளவரசி லிலிபெட் பிரித்தானியா வரும் முதன்முறையாக இருக்கும்.

மகாராணியாருக்கும் தன் பேத்தியை பார்க்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும். அதைத்தான் மகாராணியாரும் விரும்புகிறார் என்று கூறும் Katie Nicholl, இளவரசர் சார்லசும் தன் பேரக்குழந்தைகளை சந்திக்க விரும்புவார்.

ஆக, இந்த சந்திப்பு குடும்பப் பிரச்சினைகள் தீர ஒரு வாய்ப்பாக அமையும் என்கிறார்.