கோடிகளை கொட்டி எடுத்து சொதப்பும் வெளிநாட்டு வீரர்கள் - குமுறும் அணி நிர்வாகம்
ஐபிஎல் மினி ஏலத்தில் கோடிகளை கொட்டிக் கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள் சரியாக விளையாடாதது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மினி ஏலம்
ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் மினி ஏலத்தில் கோடிகளை கொட்டி வெளிநாட்டு வீரர்களை வாங்கியது. மும்பை அணி சார்பாக கேமரூன் கிரீனுக்கு ரூ.17.5 கோடி ஏலத்தில் விலை கொடுக்கப்பட்டது. ஐதராபாத் அணி தரப்பில் ஹாரி புரூக்-க்கு ரூ.13 கோடி விலை கொடுக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் சென்னை அணி தரப்பில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்-க்கு ரூ. 16.25 கோடி ஏலத்தில் விலை கொடுக்கப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
ரசிகர்கள் ஏமாற்றம்
இதில், குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல் காயம் காரணமாக பந்துவீசவும் இல்லை. ஹாரி புரூக் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் 21 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
கேமரூன் கிரீன், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது ரசிகர்கள் இவர்களது ஆட்டம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.