ஹரி நாடார் கழுத்தில் போட்டுள்ள நகையின் விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
கழுத்திலும், கையிலும் ஏராளமான தங்க நகைகள் அணிந்தபடி வலம் வரும் ஹரி நாடாரிடம் 11 கிலோ தங்க நகைகள் இருக்கின்றன. அவற்றின் மதிப்பு நான்கே முக்கால் கோடி ரூபாய். பனங்காட்டு படை கட்சி சார்பாக ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறார் ஹரிநாடார். இதையொட்டி நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரங்களை அவர் குறிப்பிட்டு உள்ளார். அது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஹரி நாடார் தனது சொத்து பற்றி தெரிவித்திருந்ததாவது, ஹரி நாடார் அசையா சொத்துக்களை விட அசையும் சொத்துக்கள் தான் அதிகமாக இருக்கின்றன. வழக்கமாக அசையா சொத்துக்கள் மதிப்புதான் எல்லா அரசியல்வாதிகளுக்கும் அதிகமாக இருக்கும். ஆனால், இதில் இவர் வித்தியாசமானவர். இதற்கு கழுத்திலும், கையிலும் அதிகமாக அவர் தங்க நகைகளை அணிந்து உள்ளதுதான் காரணம். ஹரி நாடார் வங்கி கணக்கில் 35 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருக்கிறது.
பல்வேறு நிறுவன பங்குகளில் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். பிறருக்கு கடனாகக் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டொயோட்டா பார்ச்சூனர் கார் உட்பட 6 வாகனங்கள் இவருக்கு சொந்தமாக இருக்கின்றன. இந்த அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு, 4 கோடியே 73 லட்சம் ரூபாய்.
அதாவது அவரிடம் 11 ஆயிரத்து 200 கிராம் தங்க நகைகள் உள்ளன. அவரது மொத்த சொத்து மதிப்பு மட்டும் 12 கோடியே 61 லட்சம் ரூபாய். ஆனால் அவர் குடியிருக்கும் வீடு, நிலம் ஆகியவற்றில் மதிப்பு வெறும், 11 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமேயாகும். தங்கத்தின் மீதுதான் அதிக முதலீடு செய்துள்ளார் அவர். தங்கத்தின் மீதான தனது ஆசைதான் இதற்கு காரணம் என்று அவரே முன்பு ஒருமுறை கூறியுள்ளார்.
11 ஆயிரத்து 200 கிராம், அசையும் சொத்துக்கள் வைத்திருக்கும் ஹரி நாடாரின், கழுத்திலும், கையிலும் மட்டும் சுமார் 3 கிலோ தங்க நகைகள் உள்ளன. மற்றவை வீட்டினர் பயன்படுத்துகிறார்கள். அதாவது அவர் கையிலும் கழுத்திலும் அணிந்துள்ள நகைகளின் மதிப்பு சுமார் ஒன்றே கால் கோடியை விட அதிகம் என்று அர்த்தம்.