எல்லாரும் என்னை மாம்ஸ்னு கூப்பிடுவாங்க; காரணம் இதுதான் - சீக்ரெட்டை உடைத்த ஹாரிஸ் ஜெயராஜ்
தன்னை மாம்ஸ் என அழைப்பது குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கமளித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ்
2001 ஆம் ஆண்டு மின்னலே படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது இசை பயணத்தை தொடங்கியவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
அதன் பிறகு 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பளர்களின் ஒருவராக வலம் வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஹாரிஸ் மாம்ஸ்
ஹாரிஸ் ஜெயராஜின் ரசிகர்கள் அவரை பற்றி சமூகவலைத்தளத்தில் குறிப்பிடும் போது ஹாரிஸ் மாம்ஸ் என அழைப்பார்கள். இது குறித்து ஹாரிஸ் ஜெயராஜிடம் ஒரு பேட்டியில் கேள்வியெழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த ஹாரிஸ் ஜெயராஜ், "ஆமா எல்லாரும் அப்படிதான் கூப்பிடுறாங்க. அதற்கு Master at Music and Sound என விளக்கம் கொடுக்கிறார்கள். அது ஒரு எமோஷன் என்று அவர்கள் சொல்வதாக சிரித்து கொண்டே ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கமளிப்பார்.