3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - அதிர்ச்சியில் பொதுமக்கள்
மத்தியப்பிரதேசத்தில் 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள போபாலில் அசோக் நகர் பகுதியில் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 60 வயது முதியவர் ஒருவர் 3 வயது குழந்தையை கையில் வைத்திருந்தபோது அந்த குழந்தை கதறி அழத் தொடங்கியுள்ளது.
இதனைக் கண்ட காயத்ரி பாஸ்கர் என்ற பெண் கவனித்துள்ளார். இதில் அந்த முதியவர் 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து காயத்ரி பாஸ்கர் தனது தோழி விஜயா பாட்டீலுடன் இணைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் குழந்தையின் பக்கத்து வீட்டுக்காரர் என்பதும், மிட்டாய் வாங்கி தருவதாக கூறி குழந்தையை எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . இந்த பாலியல் தொல்லை சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.