பாய்ந்து கேட்ச் பிடித்த ஹர்லீன் தியோல் - வைரலாகும் வீடியோ
இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் பாய்ந்து பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்லீன் அற்புதமான கேட்ச் ஒன்றைப் பிடித்து அசத்தியுள்ளார்.
A fantastic piece of fielding ?
— England Cricket (@englandcricket) July 9, 2021
We finish our innings on 177/7
Scorecard & Videos: https://t.co/oG3JwmemFp#ENGvIND pic.twitter.com/62hFjTsULJ
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்டிங் செய்த போது 19 வது ஓவரில் அந்த அணி வீரர் ஆமி ஜோன்ஸ் சிக்சர் அடிக்க முயன்றார். பந்து சிக்சர் எல்லையைத் தாண்டிப் போகும் என நினைத்தபோது எல்லைக்கோட்டுக்கு அருகே நின்ற இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல், அற்புதமாகப் பந்தைப் பாய்ந்து பிடித்து ஆமி ஜோன்ஸை வெளியேற்றினார். கேட்ச் பிடித்தாலும் நிலை தடுமாறியதால் எல்லைக்கோட்டுக்கு வெளியே செல்ல இருந்தார் ஹர்லீன்.
உடனே பந்தை தூக்கி மேலே போட்டு விட்டு, எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று அடுத்த நொடி உள்ளே வந்து பாய்ந்தபடி கீழே விழ இந்த பந்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இதனை சச்சின் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் பாராட்டியுள்ளனர்.