Saturday, Mar 8, 2025

நீங்க வந்தா மட்டும் போதும்...வடிவேலு, தேவா உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டத்தை வாரி வழங்கிய வள்ளல் தலைமறைவு

Tamil Cinema Deva Chennai Vadivelu Anna University
By Thahir 2 years ago
Report

வடிவேலு, தேவா உள்ளிட்ட பிரபலங்களுக்கு போலி கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கிய ஹரிஷ் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் 

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் வைத்து கடந்த பிப் 26 ம் தேதி சினிமா பிரமுகர்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது.

haris-who-gave-honorary-doctorates-absconding

இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், கஜராஜ், நடன இயக்குனர் சாண்டி, ஈரோடு மகேஷ், நடிகர் வடிவேலு, யூடியூப்பில் பிரபலமான கோபி , சுதாகர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த டாக்டர் பட்டத்திற்கும், அண்ணா பல்கலைக் கழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார்.

தேடும் போலீசார் 

அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக காவல் துறையில் புகாரளிக்கப் பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் தலைமறைவாகிவிட்டார். அவரது தொலைபேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.