நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் ஹரிநாடார் கைது
நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ஹரிநாடாரை போலீசார் கைது செய்தனர்.
கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடாரை சென்னை திருவான்மீயூர் போலீசார் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து கடந்தாண்டு நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ சர்ச்சைக்குள்ளானது.
இதுதொடர்பாக ஹரி நாடார் விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமான், ஹரிநாடார், சதா ஆகியோரின் மீது திருவான்மீயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே, மோசடி வழக்கில் பெங்களூரு போலீசாரால் ஹரி நாடார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை, திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர்.