நிர்வாணப்படுத்தி அடிக்குறாங்க... 64 பக்க கடிதத்தில் கதறிய ஹரிநாடார்!
சிறையில் உள்ள ஹரிநாடாரை போலீசார் நிர்வாணமாக வீடியோ எடுத்து விசாரிப்பதாக தனது மனைவிக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரி நாடார்
நெல்லை, மேல இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி நாடார், கேரளாவில் வசித்து வந்த ஷாலினி என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த சில வருடங்களாக ஹரி நாடார் மலேசியா நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவருடன் பழகி வந்தார்.
பின்னர் இருவரும் கணவன், மனைவியாக வாழத்தொடங்கியதால் ஷாலினியுடன் பிரச்னை ஏற்பட்டது. அதனால் தன் மனைவியைப் பிரிய முடிவெடுத்த ஹரி நாடார், விவாகரத்து வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
விவாகரத்து
இந்த நிலையில், தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஷாலினி நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். இதனிடையே, ஷாலினிக்கும் மலேசிய பெண்ணுக்குமிடையே தொலைபேசியில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
இருவரும் அதன் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்நிலையில், மலேசியப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. ஹரி நாடாரும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
மோசடி
இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த, கட்டுமான நிறுவனர் வெங்கட் ரமணி என்பவரிடம் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.7 கோடி வரை மோசடி செய்ததாக ஹரி நாடார் மீது புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹரி நாடாரை கைது செய்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
மனைவிக்கு கடிதம்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஹரி நாடார் தமது முதல் மனைவி ஷாலினிக்கு அனுப்பிய கடிதத்தில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் தமக்கு ஷாலினியுடன் வாழ பிடிக்கவில்லை என்றும், இரண்டாவது மனைவி மஞ்சுவுடன் இணைந்து வாழவே தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மலேசியா சேர்ந்த மஞ்சுவுடன் தான் வாழ்ந்ததாகவும் தனது கைது சமயத்தில் மஞ்சு தான் தனக்கு பக்க பலமாக இருந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும்போது, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த,
பிரமாண பத்திரத்தில் ஆறு கார்கள் இருப்பதாக விசாரணையின் போது அறிந்த போலீசார், அந்த கார்களை உடனடியாக சரண்டர் செய்ய கூறியுள்ளனர். ஆனால் அந்த கார்கள் தற்போது ராக்கெட் ராஜாவிடம் உள்ளதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து ராக்கெட் ராஜாவிடம் தனது காரை தரும்படி சகோதரர் மூலம் கேட்டபோது அவர் மூன்று கார்களை மட்டும் கொடுத்துவிட்டு பிற கார்களை கொடுக்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெங்களூரு குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் தன்னை லத்தி மற்றும் மட்டையால் கை, முதுகு பின்புறம் கடுமையாக அடித்து துன்புறுத்தினர் என்றும் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு குற்றப்பிரிவு துணை ஆணையர் முன்னிலையில் மீண்டும் தன்னை முழு நிர்வாணப்படுத்தி கடுமையாக அடித்து துன்புறுத்தியதாகவும் ஹரி நாடார் அந்த கடிதத்தில் கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.