ரூ.16 கோடி மோசடி: பனங்காட்டு படை கட்சியின் ஹரி நாடார் கைது
Police
Tamil Nadu
Arrest
Hari Nadar
By mohanelango
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் 35,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தார்.
இந்தத் தேர்தலில் அதிக அளவிலான வாக்குகள் பெற்ற சுயேட்சை வேட்பாளர் என்கிற பட்டத்தை பெற்றார்.
இந்த நிலையில் ரூ.16 கோடி மோசடி புகாரில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கேரளா மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரி நாடாரை கைது செய்த போலீசார் பெங்களூருவுக்கு விரசனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
பெங்களூரில் ஹரி நாடார் சுமார் 12 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.